Monday, 20 October 2014

கருணாநிதி ஈழ தமிழர்களுக்கு செய்த துறோகங்கள்

தனது குடும்பத்தவர்களுக்கு பதவி பெற்றுக் கொடுப்பதற்காக டெல்லியில் முதலமைச்சர் கருணாநிதி நீரா ராடியா என்ற அரசியல் தரகர் மூலம் சோனியாவிடம் பிச்சை கேட்டு அலைந்து திருந்த நாட்களில் தான் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள்.

நிச்சயம் அப்படி ஒரு நாளில் தான் பாலச்சந்திரன் என்ற பாலகனும் படுகொலை செய்யப்பட்டிருப்பான்.

வரலாறு என்பது ஒரு இனத்தை அழித்தவர்களை மட்டும் ஒரு போதும் பதிவு செய்யாது. ஒரு இனத்தை அழிக்க விட்டு விட்டு பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் நிச்சயம் பதிவு செய்யும்.

அந்த வகையில் ராஜபக்ஸவைப் போல் கருணாநிதிக்கும் ஈழத் தமிழர்களைக் கொன்றதில் முக்கிய பங்கு இருக்கின்றது.

கருணாநிதி என்கிற கறுப்பு ஆடு ஈழத் தமிழ்மக்களை வைத்து எவ்வாறு கபட நாடகம் ஆடியது என்பதை மீண்டும் தெளிவு படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

இன்று தமிழ்நாட்டில் எதிர்க் கட்சி அந்தஸ்து கூட இல்லாத நிலையில் ஈழத் தமிழர் பிரச்சினையில் மீண்டும் நீலிக்கண்ணீர் வடிக்க ஆரம்பித்திருக்கின்றார் கருணாநிதி.

No comments:

Post a Comment